Posts

Showing posts from March, 2026

ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை:

ஒளியற்ற உலகில் அசைந்தாடும் செங்கீரை:  ஒரு குழந்தையின் உடல் இயக்க வளர்ச்சி என்பது புறம் சார்ந்த பல்வேறு படிநிலைகளைக் கடந்து பெற்றோராலும் மற்றவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அக்குழந்தையின் அங்க அசைவுகளை ஸ்லாகித்து ஊக்குவிப்பதன் மூலம் இங்கு ஏற்றுக்கொள்ளல் என்பது வெளிப்படையாக நடைபெறுகிறது. அத்தகைய ஆரோக்கிய வளர்ச்சிக்கான முகவரி என்பது குழந்தையின் இரண்டாவது பருவமான செங்கீரை பருவத்தில் இருந்து கண்டறியப்படுகின்றது. பார்வையின்மையுடன் பிறந்த ஒரு குழந்தை இப்பருவத்தை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பதைப் பற்றி சிந்தித்தல் கூட புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அரவணைப்பும் புறக்கணிப்பும் இரு வேறு தராசுகளாக இருப்பினும், அக்குழந்தையின் அடிப்படைக் கற்றல் என்பது இப்பருவத்தில் இருந்து தான் தொடங்குகின்றது என்பது நிதர்சனம். பார்வை தவிர்த்து மற்ற புலன்களின் நுட்பமான ஆற்றலை அக்குழந்தை எவ்வாறு விவேகத்துடன் கையாண்டு, இச்சமுதாயத்தில் எதிர்நீச்சல் இடுவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றது என்பதைப் பற்றி இக்கட்டுறையில் காண்போம்.   ஐந்தாவது மாதத்தை துவக்கமாகக் கொண்ட செங்கீரைப் பருவமானத...

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு:

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு! திரும்பும் திசையெங்கும் தீக்கரையானது அமைதி ஆயினும் அடங்கவில்லை ஏகாதிபத்திய குருதி, பெண் வதைப்பே யுத்தங்களுக்கு எக்காலத்திலும் இறுதி! மூச்சு முட்டும் பேரிரைச்சல் முணங்கலற்ற மரண கூச்சல், பண வெறி கொண்ட குள்ளநரிகளுக்கு அதிகாரக் காய்ச்சல், மண்டியிடும் உயிர் மூச்சை பொசிக்கித் தள்ளும் அணுகுண்டு பாய்ச்சல்! சாம்பல் மேட்டில் சோம்பலான மனித நேயம், சரிபாதி இருப்பவளை இலக்குவைக்க, பட்ட காயம், அது சலனமற்ற பகைமை வெளிப்பட்டு உருவெடுக்க வெளுத்த சாயம்! பிணங்கள் வாசம் சுமந்த போர்க்களக் காற்று, அது பெண்டீர் மரணத்தை மறுதலித்து வீசிடும் சற்று, ஆண்களே போர்க்கள மறவர்கள் என்று பிதற்றுவது அருவேருப்பின் கூற்று!  பீரங்கி சத்தம் முன் பாய்ந்து மோதிடும் இருதயம் அவை நோட்டமிட்டு பெண் கல்வி கூடங்களையும் தாக்கிடும் அதிசையம், பெண் இன அழிப்பில் ஈடுபடும் ஈனத்தனம் எங்கனம் ஆகும் நியாயம்? அசுரத்தனமாய் ஆயுத வட்டுகள் இரக்கமற்று பாயும், குழந்தைகளை பலி கேட்டு இல்லங்களையும் மருத்துவ தளங்களையும் மேயும், இவை ரத்தம் படிந்த காலம் கொடுத்த வரலாற்று காயம்! கீறல்கள் தந்த வடுக்களின் பின்னால் அற்ப எண்ணிக்கையானத...

சமத்துவமாக்கப்பட வேண்டும் பாதுகாப்பு:

சமத்துவமாக்கப்பட வேண்டும் பாதுகாப்பு: மனித வாழ்க்கை என்பது பல்வேறு போராட்டங்களைக் கடந்து உணர்வுகளாலும் உரிமைகளாலும் கட்டி எழுப்பப்படும் ஒரு மகத்தான அறச்சாலையாகும். தான் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத எந்த வொரு சமூகமும் ஒரு காலகட்டத்தில் தங்களது உரிமையை நிலை நாட்ட குரல் எழுப்புதல் என்பது நடந்த வண்ணம் உள்ளது. அது அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போராட்டமாகும். குடும்ப பாதுகாப்பில் தொடங்கி அரசியல் சமூகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவைகளால், ஒரு தனி மனிதனின் உளவியல் சார்ந்த தேவைகளின் பட்டியல் நீண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்திற்கும் துவக்க புள்ளியாக திகழும் குழந்தை பருவம் முதலே, அவர்களின் சூழலியல் சார்ந்த அளவுகோல்களால் பாதுகாப்பு என்பது மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகவேதான் தமிழ் சிற்றிலக்கியங்களில் மிக முக்கிய இடம் வகிக்கும் பிள்ளைத்தமிழ் காப்பியங்கள், குழந்தை பாதுகாப்பினை பாடு பொருளாகக் கொண்டு முதல் பருவ பாடல்களை இயற்றியுள்ளது. இவ்வாறு குழந்தைகளை காக்கும் பொருட்டு நாம் இறைவனிடம் முறையிடும் வேளையில், பார்வை இழந்த குழந்தையின...