அவளே ஆயுதங்களுக்கு இலக்கு:

அவளே ஆயுதங்களுக்கு இலக்கு!


திரும்பும் திசையெங்கும் தீக்கரையானது அமைதி

ஆயினும் அடங்கவில்லை ஏகாதிபத்திய குருதி,

பெண் வதைப்பே யுத்தங்களுக்கு எக்காலத்திலும் இறுதி!


மூச்சு முட்டும் பேரிரைச்சல் முணங்கலற்ற மரண கூச்சல்,

பண வெறி கொண்ட குள்ளநரிகளுக்கு அதிகாரக் காய்ச்சல்,

மண்டியிடும் உயிர் மூச்சை பொசிக்கித் தள்ளும் அணுகுண்டு பாய்ச்சல்!


சாம்பல் மேட்டில் சோம்பலான மனித நேயம்,

சரிபாதி இருப்பவளை இலக்குவைக்க, பட்ட காயம்,

அது சலனமற்ற பகைமை வெளிப்பட்டு உருவெடுக்க வெளுத்த சாயம்!


பிணங்கள் வாசம் சுமந்த போர்க்களக் காற்று,

அது பெண்டீர் மரணத்தை மறுதலித்து வீசிடும் சற்று,

ஆண்களே போர்க்கள மறவர்கள் என்று பிதற்றுவது அருவேருப்பின் கூற்று!


 பீரங்கி சத்தம் முன் பாய்ந்து மோதிடும் இருதயம்

அவை நோட்டமிட்டு பெண் கல்வி கூடங்களையும் தாக்கிடும் அதிசையம்,

பெண் இன அழிப்பில் ஈடுபடும் ஈனத்தனம் எங்கனம் ஆகும் நியாயம்?


அசுரத்தனமாய் ஆயுத வட்டுகள் இரக்கமற்று பாயும்,

குழந்தைகளை பலி கேட்டு இல்லங்களையும் மருத்துவ தளங்களையும் மேயும்,

இவை ரத்தம் படிந்த காலம் கொடுத்த வரலாற்று காயம்!


கீறல்கள் தந்த வடுக்களின் பின்னால் அற்ப எண்ணிக்கையானது உயிர்களின் இழப்பு, 

ஓயாது உழைத்த கட்டிடம் கூட ஓரிடம் பிடிக்குமென்பது ஆதிக்க வரலாற்றுச் சிறப்பு,

போர்க்களம் அவளை மாய்த்திட ரகசியமாய் வீசிடும் அறமற்ற நெருப்பு!


இவையெல்லாம் உலகின் ஊதிப்பெருக்கிய ஆதங்கமாக, 

யுத்தத்தில் தலைவனே வீரன் என்று ஏடுகள் நோக,

இவள் மட்டும் தனித்து விடப்பட்டு உள்ளம் வேக,

அந்த ஆடவரின் ஆயுதங்களால் மாசற்ற மாதர்கள் இப்படியா அனுதினமும் சாக!


போர் முனையில் குத்தி கிளியும் மானுட தன்மானம், 

போராடத் திராணியற்றுப் போனால் இடித்துரைத்து ஏற்றப்படும் கொலைகார அவமானம்,

பின்னணியில் பெண்களின் உயிர்கள் தானே யுத்தங்களுக்கு வெகுமானம்!


இந்த எண்ணங்கள் திமிரியெழ புறப்படுவதென்னவோ சர்வநாசம், 

அதையே வீர தீர யுத்தமென கொண்டாடுகிறது சர்வதேசம்,

இதில் பெண்களின் குரல்கள் மட்டும் மரணங்களின் மொழிகலற்று ஊமையாய் பேசும்!


சுயம் காத்து பயம் கொள்ளா வாழ்வு அவளுக்கு கேள்விக்குறி,

அவள் பிழைத்தால் உயிர்கள் தழைக்கும் என்பதனையே சிந்திப்பான் எதிரி,

இடிபாட்டுச் சுரண்டலுக்குள் சிதை உண்ட பெண்ணுக்கோ இல்லாமல் போகிறதே முகவரி!


உடமையும் உறவையும் கேட்பார் அற்று இழப்பால், 

உயிரற்ற உணர்வுகளின் உடலையும் குண்டுகளில் தொலைப்பால் ,

இப்படியே சாவிலும் சமத்துவத்தை துறப்பாள்!


குண்டு மழையில் அவள் அழிவதென்னவோ அனுதினம்,

இன்று மட்டும் அவள் மீது வாழ்த்து மழை பொழிவதேன்னவோ மானுட ஒழுங்கீனம்,

அவளின் மரணத்தை கண்டிக்க வேண்டும் தெளிந்த ஞானம்,

அதை பொருட்படுத்தாமல் அவளின் தினம் கொண்டாடுவது பெருத்த அவமானம்!


ப. தாஹிரா! 

Comments

Popular posts from this blog

இருளுக்குள் ஓர் இசைச்சுடர்:

எழுத்தாக, வா இறைவா!