எழுத்தாக, வா இறைவா!
அறிந்தவை பகிரப்படும் அறியாதவற்றைத் தேடிப் பயணப்படும் இந்த எழுத்து பயணத்தில், சமுதாய விளைச்சல்களை பிரித்துணரும் வண்ணம் மறுக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் ஒடுக்கப்படுபவர்களின் ஒட்டுமொத்த வலி என்பதை உணர்ந்து, அவற்றை எழுத்துக்களின் வழியே அறுத்தெரியப்பட வேண்டும் என்று ஈகையாளனாம் ஏக இறைவனிடம் எழுத்துருகி இறைஞ்சுகின்றேன்!
ஞாலத்தை புரிந்துணர ஞானத் துளிக்கொடுத்து,
காலத்தை வென்றெடுக்க கருணை மழை தொடுத்து,
உள்ளத்தை சுத்திகரிக்க அறியாமை இருல் விடுத்து,
தெள்ளத் தெளிவாக்கும் அறிவை நீ எனக்கு புகுத்து!
கற்றதும் அறிவின் கண் கசடறப் பெற்றதும்,
உற்றதும் அதன் வழி நிலைத்து நிற்றலும்,
சுற்றமும் சோம்பலாக்கா நெர்மறை சூழலும்,
நித்தமும் எனக்கழித்து துணை புரிவாய் முற்றிலும்!
எழுத்துக்களின் வேர்களில் ஈரம் கனிந்திடும்,
எடுத்துரைக்கும் பாங்கில் வீரம் கசிந்திடும்,
புலப்படும் யாவும் புறப்பட தோன்றிடும்,
கலப்படமில்லா படைப்புகள் பல புனைந்திட வாரும்!
தரிசு மனங்களை தூசு தட்டி எழுப்பிட,
கரிசனம் அற்ற கள்வனை காலம் பார்த்து வீழ்த்திட,
சிறுசு பெருசு பாரும் சிற்றறிவை அறவே துடைத்திட,
சீறிய வரிகளாள் வதம் செய்ய வாய்ப்புகள் எனக்குத் தாரும்!
அதிகாரம் துருப்பிடிக்க அரைக்கூவல் விடுப்பென்,
சதிகார துகள்களை சல்லடையால் சலிப்பேன்,
மதிகெட்ட இழிச் செயலை மை தொட்டு வதைப்பேன்,
கதி நீயே என்பதனால் உன் அருள் வேண்டி துதிப்பேன்!
எண்ணத்தை துலையிடும் கரையான்களை அழித்திட,
நல்லறத்தை அறித்திடும் அதன் அபத்தத்தை முறித்திட,
சிற்றின்ப சிறுமைக்குள் புதர்மண்டி கிடந்திட,
உயிர் கொண்ட எழுத்துக்கலாள் நான் போராட வேண்டும்!
சாதியெனும் இரண்டெழுத்தை தீக்கரையால் பொசிக்கிட,
சங்கடத்தை வெரருத்து சஞ்சலங்கள் துடைத்திட,
சாத்திரத்தை உடைத்தெறிந்து பெண்ணினத்தை மதித்திட,
சம்மதிக்கும் சொல் திறத்தால் நான் தோலுரிக்க வேண்டும்!
மாற்றம் வேண்டி மண்டியிடும் மதிநுட்பங்கள் கோடி,
அதனை கேளா செவியாய் பாரா விழியாய் கடப்போர் ஒன்று கூடி,
தூற்றும் செயலை வேற்று வழியில் திசை திருப்புவதென்ன நீதி,
இதனைத் தூறுவாரி சீர்படுத்துவதே என் எழுத்து சொல்லும் சேதி!
யாவுமாகி எனை காக்கும் ஈடில்லா இறைவா,
உனை நாளும் போற்றும் என் நாவில் பைந்தமிழை தருவாய்,
சிந்தையிலும் சந்தத்திலும் பிழைகள் நீக்கி அருள்வாய்,
எந்தையவன் உனை பணிந்தேன் நீ என் எழுத்துடனே வருவாய்!
ப. தாஹிரா.
Comments
Post a Comment