பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்
பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்: வாழ்க்கை என்பது வெறும் எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல. அது பல தேடல்களின் சுவடுகளை வழி நெடுகிலும் பதித்து, பற்பல அனுபவங்களை கடந்து, காலத்தின் ஏடுகளில் தனக்கென்று ஒரு பக்கத்தை நிரப்பும் அரம் சார்ந்த நேர்த்தியான பயணம். இத்தகைய பயணம் தடைகள் இன்றி ஒரே நேர்கோட்டில் சென்று வெற்றி பெற வேண்டுமேனில், உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகிய இரண்டு சக்கரங்களின் அச்சும் முறியாமல் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அவை இரண்டும் குழந்தை பருவத்து நாட்களிலேயே தீர்மானிக்கப் பட்டுவிடுகின்றன. அது பாலினம் பொறுத்து மாறுபடுவதும், அதிலும் உடல் குறைபாட்டுடன் பிறத்தல் நடந்தால், எதார்த்த வாழ்வியல் அழுத்தத்தால், பெரும் தாக்கத்திற்கு அவை இரண்டும் உட்படுவதும் அதிகம் கவனிக்க படாமல் போய்விடுகிற செயல் இடைவிடாது நிகழ்கிறது. கலை நுட்பம் ததும்பும் மழலை பருவம் என்பது மானுட வாழ்வில் திரும்ப கிடைத்திடாத ஒரு வசந்தகாலம். இத்தகு சிறப்பு மிக்க மழலை பருவத்தை பத்தாக பிரித்து செழுமை மிகு தமிழிற்கு தந்தருலிய சான்றோர்கள் பலர். அவை: காப்பு, செங்கீரை, தாள, சப்பாணி, முத்த, வருகை, அம்புலி, ஆகிய...