இருளுக்குள் ஓர் இசைச்சுடர்:
இருலுக்குள் ஓர் இசைச்சுடர்: இசை என்பது வெறும் கலை மட்டுமல்ல. அது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகை செய்யும் உடல் இயக்க மேம்பாட்டின் அடிநாதமாகும். குழந்தை பருவத்தில் கிடைக்கும் தாலாட்டு இசை என்பது உடலின் சீரான வளர்ச்சிக்கு வித்திடும் தொன்மையான மருத்துவ முறை என்று சொல்வது ஏற்புடையதாக இருக்கக்கூடும். தாளாட்டு பாடல்கள் தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களின் சீரான இயக்கத்திற்கு வித்திடுவதோடு மட்டுமல்லாமல், குரல்களின் வழியே கடத்தப்படும் மென்மையான இசை அக் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வையும் தரவல்லதாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, அக்குழந்தை பார்வையற்று இருக்க நேர்ந்தால் தாலாட்டின் தேவை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அத்தகைய பார்வையற்ற குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த மேம்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தாலாட்டு என்பது அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கின்றதா என்று சிந்தித்தோமே யானால், அதற்கு இல்லை என்ற பதிலே பெரும்பான்மையை பெற்றுவிடுகின்றது. தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள பிள்ளைத்தமிழ் காப்பியங்களில், குழந்தையின் ஏழாம் மாதத்து செயல்பாடுகளை மையமாகக் கொண்டு தாழப்பருவ பாடல்கள் புனை...