Posts

பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்

பத்து பருவங்களும் பார்வையற்ற பெண் குழந்தைகளும்: வாழ்க்கை என்பது வெறும் எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல. அது பல தேடல்களின் சுவடுகளை வழி நெடுகிலும் பதித்து, பற்பல அனுபவங்களை கடந்து, காலத்தின் ஏடுகளில் தனக்கென்று ஒரு பக்கத்தை நிரப்பும் அரம் சார்ந்த நேர்த்தியான பயணம். இத்தகைய பயணம் தடைகள் இன்றி ஒரே நேர்கோட்டில் சென்று வெற்றி பெற வேண்டுமேனில், உடல் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகிய இரண்டு சக்கரங்களின் அச்சும் முறியாமல் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அவை இரண்டும் குழந்தை பருவத்து நாட்களிலேயே தீர்மானிக்கப் பட்டுவிடுகின்றன. அது பாலினம் பொறுத்து மாறுபடுவதும், அதிலும் உடல் குறைபாட்டுடன் பிறத்தல் நடந்தால், எதார்த்த வாழ்வியல் அழுத்தத்தால், பெரும் தாக்கத்திற்கு அவை இரண்டும் உட்படுவதும் அதிகம் கவனிக்க படாமல் போய்விடுகிற செயல் இடைவிடாது நிகழ்கிறது. கலை நுட்பம் ததும்பும் மழலை பருவம் என்பது மானுட வாழ்வில் திரும்ப கிடைத்திடாத ஒரு வசந்தகாலம். இத்தகு சிறப்பு மிக்க மழலை பருவத்தை பத்தாக பிரித்து செழுமை மிகு தமிழிற்கு தந்தருலிய சான்றோர்கள் பலர். அவை: காப்பு, செங்கீரை, தாள, சப்பாணி, முத்த, வருகை, அம்புலி, ஆகிய...

எழுத்தாக, வா இறைவா!

அறிந்தவை பகிரப்படும் அறியாதவற்றைத் தேடிப் பயணப்படும் இந்த எழுத்து பயணத்தில், சமுதாய விளைச்சல்களை  பிரித்துணரும் வண்ணம் மறுக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் ஒடுக்கப்படுபவர்களின் ஒட்டுமொத்த வலி என்பதை உணர்ந்து, அவற்றை எழுத்துக்களின் வழியே  அறுத்தெரியப்பட  வேண்டும் என்று  ஈகையாளனாம் ஏக இறைவனிடம் எழுத்துருகி இறைஞ்சுகின்றேன்! ஞாலத்தை புரிந்துணர ஞானத் துளிக்கொடுத்து, காலத்தை வென்றெடுக்க கருணை மழை தொடுத்து, உள்ளத்தை சுத்திகரிக்க அறியாமை இருல்   விடுத்து, தெள்ளத் தெளிவாக்கும் அறிவை நீ எனக்கு புகுத்து! கற்றதும் அறிவின் கண் கசடறப் பெற்றதும்,  உற்றதும் அதன் வழி நிலைத்து நிற்றலும், சுற்றமும் சோம்பலாக்கா நெர்மறை சூழலும், நித்தமும் எனக்கழித்து துணை புரிவாய்  முற்றிலும்! எழுத்துக்களின் வேர்களில் ஈரம் கனிந்திடும், எடுத்துரைக்கும் பாங்கில் வீரம் கசிந்திடும், புலப்படும் யாவும் புறப்பட தோன்றிடும், கலப்படமில்லா படைப்புகள் பல புனைந்திட வாரும்! தரிசு மனங்களை தூசு தட்டி எழுப்பிட, கரிசனம் அற்ற கள்வனை காலம் பார்த்து வீழ்த்திட, சிறுசு பெருசு பாரும் சிற்றறிவை அறவே துடைத்திட, ச...